பெ.சண்முகம் பங்கேற்பு திருவாரூர், மார்ச் 6 - திருவாரூர் மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வளர்ச்சி நிதி மற்றும் நாடாளுமன்ற தேர்தல் நிதி பெரும் சிறப்பு சுற்றுப்பயணம் மார்ச் 5, 6 ஆகிய தினங் களில் திருவாரூர் மாவட்டத்தில் நடை பெறுகிறது. இதன் 2 ஆம் நாள் சுற்றுப்பய ணம் புதன்கிழமை நடைபெற்றது. திருத்துறைப்பூண்டி (தெற்கு) ஒன்றியம் ரூ.50 ஆயிரம், திருத்துறைப்பூண்டி நகரம் ரூ.25 ஆயிரம், முத்துப்பேட்டை ஒன்றியம் ரூ.35 ஆயிரம், முத்துப்பேட்டை நகரம் ரூ.55 ஆயி ரம், கோட்டூர் ஒன்றியம் ரூ.55 ஆயிரம், மன்னார்குடி ஒன்றியம் ரூ.30 ஆயிரம், மன்னார்குடி நகரம் ரூ.18 ஆயிரம் என 7 இடைக்கமிட்டிகள் பொதுமக்களிடம் பெற்ற நிதியை, மத்தியக் குழு உறுப்பினர் பெ. சண்முகத்திடம் வழங்கினர். இதில் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தர மூர்த்தி மற்றும் மாவட்ட செயற்குழு, மாவட்டக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.