districts

மன்னார்குடியில் தமுஎகச கலை இலக்கிய இரவு

மன்னார்குடி, மே 29-

    தமுஎகச மன்னார்குடி கிளையில் சார்  பில் பந்தலடியில் உள்ள இரா.தாமோ தரன் நினைவரங்கில் கலை இரவு ஞாயி றன்று நடைபெற்றது.  

    கிளைத் தலைவர் கா.வீ.பாஸ்கரன் தலைமை வகித்தார். முனைவர் பேரா.லெனின், தியாக சிவசுப்பிரமணியன், சீ. சுந்தரராஜகோபாலன் ஆகியோர் முன் னிலை வகித்தனர். கலை இரவு செயலாளர் கா.பிச்சைக்கண்ணு வரவேற்றார். மாநில  துணை பொதுச்செயலாளர் கவிஞர் களப் பிரான் கலை இரவை துவக்கி வைத்தார்.  

   மாவட்டத் தலைவர் மு.சௌந்தர ராஜன், மாவட்டச் செயலாளர் ஜி.வெங்க டேசன் உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினர். வேலூர் சாரல் கலைக்குழுவின் பறை யாட்டம் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கரிசல் கிருஷ்ணசாமி, ஆரூர் மகாலிங்கம் ஆகியோரின் மண்ணின் மணம் பரப்பும் நல்லிசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.  

   லிம்போ கேசவனின் விந்தை மனிதன் என்னும் நெருப்பு நடனம் நடைபெற்றது. சிறுமிகள் மா.இரா.ஜானவி, மா.இரா.மயூ ரிகாஸ்ரீ சிலம்பாட்டம், சிறுவன் அரவிந்த்  சங்கரின் பறையடி, மாணவி ரா.ச.தமிழ் ஓவியாவின் நடனம் மக்களின் பாராட்டை பெற்றது.  

   தேசம் போகிறபோக்கை பாருங்க என்ற  தலைப்பில் பெண்ணிய போராளி கவிஞர் பாலபாரதியும், ஏர் நடத்தி்ய போர்கள் என்ற  தலைப்பில் தமுஎகச மாநிலத் தலைவர்  மதுக்கூர் இராமலிங்கமும் உரையாற்றி னர். கவிஞர் வல்லம் தாஜுபால் தலைமை யில் கவிஞர்கள் சரஸ்வதி, தாயுமானவன், கோவி.அசோகன், நாகை பாரதி, பூமி நாதன், முருகையன் ஆகியோர் பங்கேற்ற  கவியரங்கம் நடைபெற்றது.  

   எழுத்தாளர் ஐ.வி.நாகராஜன் எழுதிய ‘நமது அம்பேத்கர்’ என்னும் நூலை  மாவட்டப் பொருளாளர் மு.செல்வராஜ் வெளியிட, கி.அகோரம் பெற்றுக் கொண்  டார். நூலை எழுதியதன் பின்னணியை விளக்கி ஐ.வி.நாகராஜன் உரையாற்றி னார்.  முன்னதாக பெரியார் சிலைக்கு மாலை  அணிவித்து கலைஞர்கள் ஆர்வலர்கள் பங்கேற்ற பேரணிக்கு வி.கோவிந்தராஜ் தலைமை வகித்தார்.

;