districts

img

மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மாற்றுத்திறனாளிகள் பெட்டிக் கடைகள் வைக்க அனுமதி வழங்க கோரிக்கை

திருச்சிராப்பள்ளி, ஜூன் 27 - தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாது காப்போர் உரிமைகளுக்கான சங்க திருவெறும்பூர் ஒன்றிய பேரவை சிபிஎம் ஒன்றிய அலுவலகத்தில் நடை பெற்றது. கூட்டத்திற்கு சித்ரா தலைமை வகித்தார். மாநகர் மாவட்டச்  செயலாளர் ரவி துவக்கவுரையாற்றி னார். சிபிஎம் திருவெறும்பூர் தாலுகா  செயலாளர் மல்லிகா, சங்க மாவட்ட  பொருளாளர் சுப்ரமணி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.  நூறுநாள் வேலைத் திட்டத்தில் அனைத்து நாட்களிலும் மாற்றுத்திற னாளிகளுக்கு வேலை வழங்க வேண்டும். சட்டக்கூலி ரூ.281 வழங்க  வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக் கான மாதாந்திர உதவித்தொகை ரூ.1000-ஐ, ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். கடும் ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப் பட்டு வரும் உதவித்தொகையை ரூ.5  ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்பில் 5 சதவீத இட ஒதுக்கீடு அடிப்படையில் வேலை  வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப் பட்டனர். செயலாளராக ஜெ.சித்ரா, துணைத் தலைவர்களாக முருகேசன்,  தட்சிணாமூர்த்தி, பொருளாளராக கலைவாணன், துணைச் செயலாளர் களாக மருதாம்பாள், கணேசமூர்த்தி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். 

திருச்சி கிழக்கு பகுதி
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க திருச்சி கிழக்கு பகுதி மாநாடு  செந்தண்ணீர்புரம் எஸ்.ஆர்.ஜே  திருமண மண்டபத்தில் நடைபெற்றது.  மாநாட்டிற்கு பகுதி தலைவர் அந்தோணி சேகர் தலைமை வகித்தார். சங்க கொடியை மாநகர் மாவட்ட செயலாளர் கோபிநாத் ஏற்றி னார். மாவட்ட தலைவர் ஜெயபால் துவக்க உரையாற்றினார். சிறப்பு விருந்தினர்களாக திருச்சி மாநக ராட்சி துணை மேயர் திவ்யா தன கோடி, மூன்றாவது மண்டல கோட்ட  தலைவர் மதிவாணன், சிபிஎம் மாமன்ற உறுப்பினர் சுரேஷ் ஆகி யோர் சிறப்புரையாற்றினர்.  திருச்சி மாநகர பகுதிகளில் வாடகை வீட்டில் குடியிருந்து வரும் மாற்றுத்திறனாளி குடும்பங்களுக்கு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம் பாட்டு வாரியம் மூலமாக கட்டப்பட்டு  வரும் அடுக்குமாடி குடியிருப்புகளில் 5 சதவீத இட ஒதுக்கீடு அடிப்படை யில் வீடுகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும். மாமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி திருச்சி மாநகராட்சி க்கு உட்பட்ட பகுதிகளில் மாற்றுத்திற னாளிகள் 1000 பெட்டிக் கடைகள் வைக்க அனுமதி வழங்க வேண்டும் என்பன உள்பட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. மாநிலச் செயலாளர்  பி.ஜீவா நிறைவுரை ஆற்றினார்.

;