நாகப்பட்டினம், ஜன.30 - நாகப்பட்டினம் மாவட்ட ஜாக்டோ-ஜியோ சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் அ.தி.அன்பழகன் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. ஜாக்டோ-ஜியோ உயர்மட்டக்குழு உறுப்பி னர் பா.ராணி மறியலை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். புதிய பென்சன் திட்டத்தை கைவிட்டு பழைய பென்சன் திட்டத்தை கொண்டு வர வேண்டும். சரண் விடுப்பு ஒப்படைப்பு மீண்டும் வழங்கிட வேண்டும். உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு வழங்க வேண்டும். அரசுத் துறைகளில் காலியாக உள்ள காலிப் பணியிடங்களை உட னடியாக நிரப்ப வேண்டும். 21 மாத ஊதிய மாற்ற நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். 2002 முதல் 2004 தொகுப்பு ஊதியத்தில் நிய மனம் செய்யப்பட்ட பணிக்காலத்தை வரன் முறை செய்ய வேண்டும். சாலை பணியாளர்க ளின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிகால மாக வரைமுறைப்படுத்த வேண்டும். சத்துணவு ஊழியர்களுக்கு ஊதியக் குழுவில் வரையறுக் கப்பட்ட ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
திருச்சிராப்பள்ளி
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பால்பாண்டி, நீல கண்டன், பாபு, உதுமான் அலி ஆகியோர் தலைமை வகித்தனர். அரசு கல்லூரி ஆசிரியர் சங்க மாநிலத் தலைவர் முனைவர் டேவிட் லிவிங்ஸ்டன் துவக்க உரையாற்றினார். மாநில ஒருங்கிணைப்பாளர் அன்பரசன் மறியல் போ ராட்டத்தை துவக்கி வைத்தார். மாநில துணைத் தலைவர் பெரியசாமி நிறைவுரையாற்றினார்.
திருவாரூர்
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சண்முக வடிவேல், பிரகாஷ், முத்துவேல், சத்தியமூர்த்தி மணி மாறன் ஆகியோர் தலைமை வகித்தனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில துணைப் பொதுச் செயலாளர் வி.சோமசுந்த ரம் மறியலை துவக்கி வைத்து உரையாற்றி னார். ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப் பாளர்கள் கோரிக்கைகளை விளக்கி சிறப்புரை யாற்றினர். அரியலூர் அரியலூர் அண்ணாசிலை அருகே ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ-ஜியோ அமைப்பி னர், பின்னர் அங்கிருந்து சிறிது தூரம் ஊர்வல மாகச் சென்று சாலை மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு, அமைப்பின் மாவட்ட தலைமை ஒருங்கிணைப்பாளர்கள் வேல்முரு கன், கருணாநிதி, ஷேக்தாவூத், ஜெயராஜ், நம்பி ராஜ், பெரியசாமி, சுவை.முருகேசன், பி.மாய வேல் ஆகியோர் தலைமை வகித்தனர்.