அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, திமுக இளைஞரணி சார்பாக புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே அமரசிம்மேந்திரபுரம் ஊராட்சியில் மாட்டுவண்டி, குதிரை வண்டி எல்லை பந்தயம் நடைபெற்றது. இதில் 70 ஜோடி மாட்டு வண்டிகள் மற்றும் 20 குதிரை வண்டிகள் கலந்து கொண்டன. முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாடு மற்றும் குதிரை வண்டி உரிமையாளர்களுக்கு ரூ.1.20 லட்சம் ரொக்கப் பரிசும், கோப்பைகளும் வழங்கப்பட்டன.