districts

img

கலை இலக்கிய நிகழ்ச்சிகள் நடத்த நகரின் மையத்தில் கட்டிடம் அமைக்க வேண்டும் தமுஎகச மயிலாடுதுறை மாவட்ட மாநாடு கோரிக்கை

மயிலாடுதுறை, ஜூன் 26-  மயிலாடுதுறையில் தமிழ்நாடு முற் போக்கு எழுத்தாளர்-கலைஞர் சங்கத் தின் 15 ஆவது மாவட்ட மாநாடு தானா  மஹாலில் எழுத்தாளர் எல்.பி.சாமி நினைவரங்கில் நடைபெற்றது.  முன்னதாக தந்தை பெரியார் சிலைக்கு எழுத்தாளர் முனைவர் இராச. கலைவாணி, மாமேதை அம்பேத்கர் சிலைக்கு முனைவர் இர.இந்திரா, மாயூ ரம் வேதநாயகனார் சிலைக்கு தவில் கலைஞர் புத்தூர் ரவி, பேரறிஞர் அண்ணா சிலைக்கு பல்சுவைக் கலைஞர் கிங் பைசல் ஆகியோர் மாலை அணி வித்து மரியாதை செலுத்தினர். பின்னர் நடைபெற்ற கலை இலக்கிய பேரணியை முனைவர் இராச.கலை வாணி பறையிசைத்து துவக்கி வைத் தார். செ.வாசுகி, செம்பை குணா, ந. சதீஸ்ராஜ் மாநாட்டை வழி நடத்தினர். அஞ்சலி தீர்மானத்தை இரா.சபரிநாதன் முன்மொழிந்தார். மாவட்டத் தலைவர்  கவிஞர் நா.இராசாராமன் தலைமை யுரையாற்றினார். வரவேற்புக் குழுத்  தலைவர் இரா.இராமானுஜம் வர வேற்று பேசினார். மாநாட்டை துவக்கி வைத்து எழுத்தா ளரும், மாநில செயற்குழு உறுப்பினரு மான எஸ்.ஏ.பெருமாள் உரையாற்றி னார். பண்பாட்டு அறிக்கையை கவிஞர்  பொன்.தேவேந்திரன், கலை இலக்கிய அறிக்கையை இரா.தேன்மொழி, அமைப்பறிக்கையை மாவட்டச் செய லாளர் பேராசிரியர் பாலசுந்தரம், வரவு- செலவு அறிக்கையை மாவட்டப் பொரு ளாளர் து.இளவரசன் ஆகியோர் வாசித்தனர். மாவட்டக் குழு உறுப்பினர்கள் சு.சிவ ராமன், பா.பரணி ஆகியோர் தீர்மானங் களை முன் மொழிந்தனர்.

மாநாட்டை வாழ்த்தி முனைவர் நா.சாந்தகுமாரி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட  செயலாளர் ஜி.ஸ்டாலின் உரையாற்றி னர். புதிய மாவட்ட செயலாளராக பேரா சிரியர் பாலசுந்தரம், தலைவராக கவிஞர் நா.ராஜாராமன், பொருளாளராக இரா.தேன்மொழி, துணைத் தலைவர்களாக என்.எஸ்.உதயக்குமார், பேராசிரியர் இந்திரா, துணைச் செயலாளர்களாக முனைவர் சாந்தக்குமாரி, இரா.சபரி நாதன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்ட னர். 9 பேர் கொண்ட மாவட்ட செயற்குழு வும், 25 பேர் கொண்ட புதிய மாவட்டக் குழுவும் தேர்வு செய்யப்பட்டது. பொது பயன்பாட்டிற்கு உகந்தவாறு கலை இலக்கிய நிகழ்வுகள் நடத்த மயி லாடுதுறை நகரின் மையப் பகுதியில் கட்டிடம் ஒன்றை அமைக்க தமிழக அரசு  நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ கத்தில் பொறியியல் பட்ட மேற்படிப்பை  தமிழ் வழியில் மேற்கொள்ள நட வடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநில துணைப் பொதுச் செயலாளர்  எழுத்தாளர் களப்பிரன் நிறைவுரை யாற்றினார்.  பின்னர், சின்னக்கடைவீதி கவிஞர் காவியன் நினைவரங்கில், சாயாவனம் கந்தசாமி நினைவுத்திடலில் நடை பெற்ற கலை இலக்கிய இரவு நிகழ்ச்சி க்கு, மாவட்டத் தலைவர் கவிஞர் நா. இராசாராமன் தலைமை வகித்தார். “பன்முக இந்தியா” என்ற தலைப்பில் கவிஞர் தாஜ்பால், “என்ன நடக்குது நாட்டுல” என்ற தலைப்பில் கவிச்சரம்,  சென்னைக் கலைக்குழு வழங்கிய இடம், பயணம், நாடகங்கள், மேட்டூர் வசந்தி, ஆக்கூர் உதயகுமார், மாப் படுகை ம.இளையராஜா ஆகியோரின் நாட்டுப் புறப்பாடல்கள், சென்னை மாற்று ஊடக கலைக்குழுவின் பறை யாட்டம் என பல்வேறு கலை நிகழ்ச்சி கள் நடைபெற்றன.

;