பாபநாசம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மூலிகைத் தோட்டம் அமைக்கப்பட்டது. இதில் பெருநெல்லி, சிறுநெல்லி, கருவேப்பிலை, மருதாணி, துளசி, கற்பூரவல்லி, சோற்று கற்றாழை, பிரண்டை, பப்பாளி, செம்பருத்தி நடப்பட்டன. பள்ளித் தலைமையாசிரியர் மணியரசன், உதவித் தலைமையாசிரியர் ரமேஷ், என்.எஸ்.எஸ்., என்.சி.சி., தேசிய பசுமைப் படை அலுவலர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.