districts

குடியரசு தின விழா திருச்சியில் இன்று அணிவகுப்பு ஒத்திகை ரயில், விமான நிலையங்களில் பலத்த பாதுகாப்பு

திருச்சிராப்பள்ளி, ஜன.24 - நாடு முழுவதும் ஜன.26 ஆம் தேதி 73-வது  குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ளது.  ஒவ்வொரு ஆண்டும் மிக சிறப்பாக கொண் டாடப்படும் குடியரசு தின விழா கடந்த சில  ஆண்டுகளாக கொரோனாவால் கலை இழந்து காணப்படுகிறது.  இந்த ஆண்டு ஒன்றிய - மாநில அரசுகள் கொரோனா பரவல் காரணமாக அனைத்து நிகழ்ச்சிகளிலும் கட்டுப்பாடுகளை வகுத்து கொண்டாட்டங்களை குறைத்துள்ளது. இந்நி லையில் திருச்சி சுப்பிரமணியபுரம் ஆயுதப் படை மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் சிவ ராசு தலைமையில் நடைபெறும் குடியரசு தின  அணிவகுப்பு விழாவிற்கான ஒத்திகை திங்க ளன்று காலை நடைபெற்றது. இந்த ஒத்திகையில் கலந்து கொண்ட போலீசார் முகக்கவசம் அணிந்து பயிற்சி யில் ஈடுபட்டனர். அதேபோல் திருச்சி ரயில்  நிலையத்தில் திருச்சி கோட்ட ரயில்வே மேலா ளர் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடை பெற உள்ள குடியரசு தின விழா நிகழ்ச்சிக்கான  ஒத்திகையில் ரயில்வே பாதுகாப்பு படையி னர் ஈடுபட்டனர். மேலும் திருச்சி சர்வதேச விமான நிலை யத்தில் குடியரசு தின விழாவை முன்னிட்டு பாதுகாப்பு கருதி விமான நிலையத்திற்குள் வரக்கூடிய வாகனங்கள் அனைத்தும் ஒன்றிய தொழில் பாதுகாப்பு படையினரால் சோ தனை செய்யப்பட்டது. மேலும் மோப்ப நாய்களை கொண்டு பயணிகள் கொண்டு வரக்கூடிய உடைமைகளும் சோதனை நடத்தப்பட்டன. இதேபோல் திருச்சி விமான நிலையத்தி லும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. வரும் பயணிகள் பலத்த சோத னைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய ஒன்றிய தொழிலக பாதுகாப்பு படை போலீசார் ரோந்து  பணியில் ஈடுபட்டு வருகின்றனர். விமான  நிலையம் முழுவதும் ஒன்றிய தொழிலக பாது காப்பு படை போலீசாரின் கட்டுப்பாட்டில் உள்ளது.

;