தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையராக மகேஸ்வரி வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் ஏற்கனவே திண்டுக்கல் மாநகராட்சி ஆணையராக பணியாற்றினார். தஞ்சை மாநகராட்சி ஆணையராக பணியாற்றி வந்த சரவணகுமார், கரூர் மாநகராட்சி ஆணையராக பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.