districts

img

காட்டுச்சேரி சமத்துவபுரத்தில் புதிய வீடுகள் கட்ட அடிக்கல் நாட்டு விழா

மயிலாடுதுறை, ஜூலை 17 - மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகேயுள்ள காட்டுச்சேரியில் கடந்த 1996 - 2001 ஆம் ஆண்டு கால திமுக ஆட்சியில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால், ‘பெரியார் நினைவு சமத்துவபுரம்’ அமைக்கப்பட்டு 100 வீடுகள் கட்டப்பட்டன.  அந்த வீடுகளில் தாழ்த்தப்பட்டவர்கள், பின்தங்கியவர்கள், மிகவும் பின்தங்கிய வர்கள் மற்ற சமூகத்தினர் என இடஒதுக்கீடு அடிப்படையில் வீடுகள் ஒதுக்கப்பட்டன. 100 குடும்பங்கள் வசித்து வந்த நிலையில், கடந்த 10 ஆண்டுகளாக அந்த வீடுகள் பரா மரிப்பு இல்லாமல் இருந்ததால் 5 வீடுகளை  தவிர, 95 வீடுகள் முழுமையாக பழுதடைந்த  நிலையில் இருந்தன.  அந்த வீடுகளுக்கு மாற்றாக புதிய வீடு களை கட்டவும், பெரியார் சிலை, பெரியார்  நினைவு சமத்துவபுர வளைவு, பள்ளி கட்டிடங் கள், சமுதாயக்கூடம், சாலைகள், இவை களை மேம்படுத்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.4 கோடியே 52 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து பழைய வீடுகளுக்கு பதில் புதிய வீடுகள் கட்டுவதற்கு உத்தர விட்டார்.  புதிய வீடுகள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா காட்டுச்சேரி சமத்துவபுரத்தில்  நடைபெற்றது. விழாவிற்கு மயிலாடுதுறை ஆட்சியர் லலிதா தலைமை வகித்தார். ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை  முதன்மைச் செயலாளர் அமுதா, தமிழ்நாடு  மகளிர் நிறுவன மேலாண்மை இயக்குனர் திவ்யதர்ஷினி மற்றும் மயிலாடுதுறை எம்.பி. ராமலிங்கம், எம்.எல்.ஏக்கள் நிவேதா முருகன், ராஜகுமார், பன்னீர்செல்வம் ஆகி யோர் முன்னிலை வகித்தனர்.   விழாவில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியகருப்பன் புதிய வீடு கள் கட்ட அடிக்கல் நாட்டி உரையாற்றினார்.

;