சென்னை, பிப்.29- ராமநாதபுரத்தில், 325 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமையவுள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஞாயிறன்று (மார்ச் 1) அடிக்கல் நாட்டுகிறார். 22 ஏக்கர் பரப்பளவில், அமையவுள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அடிக்கல் நாட்டுவிழாவில், துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் பலர் கலந்து கொள்ளவுள்ளனர். இதையொட்டி, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜராஜன் தலைமையில் சுமார் 3000 காவலர்கள் நகர் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.