தஞ்சாவூர், மார்ச் 9- தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஒன்றியம் கழனிவாசல் ஊராட்சியில் ஊராட்சி செயலகம் ரூ.42 லட்சத்து 65 ஆயிரம் மதிப்பில் கட்டப்படுகிறது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா ஊராட்சி மன்ற தலைவர் ரமா குமார் தலைமையில் நடைபெற்றது. ஒன்றியக் குழு தலைவர் மு.கி.முத்து மாணிக்கம் முன் னிலை வகித்தார். பேராவூரணி எம்எல்ஏ என்.அசோக் குமார் புதிய கட்டிடப் பணிக்கு அடிக்கல் நாட்டினார். இதில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சடையப்பன், கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் சுவாதி காமராஜ், திமுக மாவட்ட அவைத் தலைவர் சுப. சேகர், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர்கள் முகமது கனி, ராதாகிருஷ்ணன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.