districts

img

ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படியை வழங்குக! மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு நூதனப் போராட்டம்

திருச்சிராப்பள்ளி, அக்.11 - மின் வாரிய ஓய்வூதியர் களுக்கு 3 சதவீத அகவிலைப் படியை வழங்க வேண்டும்.  மின்வாரியம் பொதுத்துறை யாகவே நீடிக்க வேண்டும். வாரிய செயல்முறை ஆணை  எண். 2-ஐ ரத்து செய்ய  வேண்டும். முடக்கி வைக்கப் பட்ட விதவை, விவாகரத்து, ஊனமுற்றோர், குடும்ப ஓய்வூதியங்களை வழங்க வேண்டும். மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும்.  புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின் வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு திருச்சி மெட்ரோ  கிளை சார்பில் செவ்வா யன்று திருச்சி மன்னார் புரத்தில் உள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு அரை நிர்வாண ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு திருச்சி மெட்ரோ தலைவர் மனோகரன் தலைமை வகித் தார். ஆர்ப்பாட்டத்தை சிஐடியு புறநகர் மாவட்டச் செயலாளர் சிவராஜ் துவக்க  வைத்தார். ஆர்ப்பாட் டத்தை விளக்கி சங்க கிளை  செயலாளர் பன்னீர்செல் வம், கிளை பொருளாளர் சிவ ஞானம், துணைத் தலைவர்  கிருஷ்ணமூர்த்தி, கிளை  செயலாளர் சி.கிருஷ்ண மூர்த்தி ஆகியோர் பேசி னர். ஆர்ப்பாட்டத்தை வாழ்த்தி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு திருச்சி மெட்ரோ தலைவர் நடராஜ், பொருளாளர் பழனி யாண்டி ஆகியோர் பேசினர்.  சங்க துணை செயலாளர் சந்திரன் நன்றி கூறினார்.
தஞ்சாவூர்
தஞ்சாவூர் மேற்பார்வை மின் பொறியாளர் அலுவலக வாயிலில், மின்வாரிய ஓய்வூதியர்கள், மேலா டையின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட் டத்திற்கு கிளைத்தலைவர் எம்.முனியாண்டி தலைமை வகித்தார். அனைத்து துறை  ஓய்வூதியர் சங்க கூட்ட மைப்பு மாவட்டச் செயலா ளர் ஆர்.தமிழ்மணி துவக்க  உரையாற்றினார். திருவா ரூர் கிளைச் செயலாளர் ஜி. குமார் கோரிக்கை விளக்க உரையாற்றினார்.  மின் ஊழியர் மத்திய அமைப்பு திட்டத் தலை வர் ஏ.அதிதூத மைக்கேல் ராஜ், திட்டப் பொருளாளர் எஸ்.சங்கர், திட்ட துணைத்  தலைவர் எம்.ஆரோக்கிய சாமி, அகில இந்திய விவ சாயத் தொழிலாளர் சங்க மாவட்டப் பொருளாளர் கே. அபிமன்னன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். கிளைச்  செயலாளர் து.கோவிந்த ராஜ் நிறைவுரையாற்றினார்.

;