districts

img

மக்களுக்கான உரிமைப் போராட்டத்தில் ஈடுபடும் எனக்கு வாய்ப்பு தாருங்கள் தஞ்சை 36 ஆவது வார்டு சிபிஎம் வேட்பாளர் இ.வசந்தி வாக்குச் சேகரிப்பு

தஞ்சாவூர், பிப்.12 - மக்களுக்கான உரிமை போராட்டத் தில் ஈடுபட்டு வரும் எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் என தஞ்சை மாநக ராட்சி 36 ஆவது வார்டில் போட்டியிடும்  சிபிஎம் வேட்பாளர் இ.வசந்தி வாக்கா ளர்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.  தஞ்சாவூர் மாநகராட்சி 36 ஆவது வார்டில் திமுக தலைமையிலான மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளரும், மாதர் சங்க மாநிலக் குழு உறுப்பினரும், கட்சி மாவட்டக்குழு உறுப்பினருமான இ. வசந்தி பூக்கார 1, 2, 3 ஆவது தெரு  மற்றும் பாத்திமா நகர் ஆகிய பகுதி களில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடு பட்டார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளர் சாமி.நடராஜன், சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பி னர்கள் பி.செந்தில்குமார், ஆர்.கலைச் செல்வி, மாவட்டக் குழு உறுப்பினர் செல்வராஜ், மாநகரச் செயலாளர் எம். வடிவேலன், மாநகரக் குழு உறுப்பி னர்கள் சி.ராஜன், வின்சிலா, சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் கே. அன்பு, எம்.எஸ்.ராஜா, போக்குவரத்து அரங்கம் ராமசாமி மற்றும் கிளைச் செயலாளர்கள், மாதர் சங்க நிர்வாகி கள் உடனிருந்தனர். அப்போது அவர் பொதுமக்களிடம் கூறுகையில், “மாதர் சங்க நிர்வாகி யாக பொது மக்களுக்கான பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டுள்ளேன். சாதாரண என்னை, நீங்கள் நகர் மன்ற உறுப்பினராக தேர்வு செய்தால், பொதுமக்களுக்கு உதவி செய்வேன். வார்டு மக்களுக்கு பிறப்பு, இறப்பு சான்றிதழ், வருமான சான்றிதழ் பெற்றுத் தர உதவுவேன்.  முதியோர் உதவித்தொகை, கல்வி  உதவித்தொகை, விதவை உதவித் தொகை பெற்றுத் தர நடவடிக்கை எடுப்பேன். குடும்ப அட்டை இல்லாத வர்களுக்கு குடும்ப அட்டை பெற்று தருவேன். இப்பகுதியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி தருவேன். எந்நேரத்திலும் என்னை தொடர்பு கொள்ளலாம். உங்கள் குரலுக்கு செவி  சாய்த்து, உங்களில் ஒருவராக இருப் பேன். எனவே நடைபெறவுள்ள மாநக ராட்சி தேர்தலில் என்னை உறுப்பினராக  வெற்றி பெறச் செய்யுங்கள்” என்றார்.

;