districts

img

பொறுப்பேற்பு

தஞ்சாவூர், ஏப். 1 -  தஞ்சாவூர் மருத்துவம், ஊரக  நலப் பணிகள் மற்றும் (குடும்பம்) துணை இயக்குநராக ஜி.குமரவேல் தற்காலிகமாக பொறுப்பு வகித்து வந்தார்.  இந்நிலையில், பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் கடந்த 20  ஆண்டுகளாக குழந்தைகள் நல  மருத்துவராகவும், தலைமை மருத்துவராகவும் பணியாற்றிய  டாக்டர் அ.அன்பழகன் (52) துணை இயக்குநராக பதவி  உயர்வு பெற்றார். இதையடுத்து திங்கள்கிழமை அன்பழகன்  துணை இயக்குநராக பொறுப்பேற்றுக் கொண்டார்.  இவருக்கு தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி பேராசிரி யர்கள், பட்டுக்கோட்டை, திருவையாறு அரசு மருத்துவ மனை மருத்துவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.