திருச்சிராப்பள்ளி, மே 8- இந்தியாவின் மிகப் பெரிய டிஜிட்டல், வேளாண் உட்பொருட்கள் செயல்தள மான பிக்ஹாட் தமிழ் மொழி யில் ஒரு மொபைல் செய லியை அறிமுகம் செய்திருக் கிறது. தரவுகள், தொழில்நுட்பம் மற்றும் பயிர் அறிவியல் ஆகியவற்றை சிறப்பாக பயன்படுத்துவதன் மூலம் தனிப்பட்ட ஆலோசனை களை வழங்கி இப்பிராந்தியத் திலுள்ள விவசாயப் பெரு மக்கள் திறனதிகாரம் பெறச் செய்வதே இச்செயலி அறி முகத்தின் நோக்கமாகும். பிக்ஹாட் நிறுவனத்தின் இணை-நிறுவனரும், இயக்குநருமான சச்சின் நந்வானா இதுபற்றி கூறுகை யில், ‘‘சரியான, விவேகமான முடிவை விவசாயிகள் எடுப்ப தற்கு உதவுவதற்காகவே பிக்ஹாட் செயலி (ஆப்) உரு வாக்கப்பட்டிருக்கிறது. இச்செயலியைப் பயன் படுத்துவதன் மூலம் அறு வடைக்கு முந்தைய நிலை யிலிருந்து, அறுவடைக்கு பிந்தைய நிலை வரை சாகு படி செய்யும் தங்களது பயிர் களுக்கான தேவைகளை விவசாயிகளால் பூர்த்தி செய்ய முடியும். பயிர்க ளுக்கு ஏற்படும் சேதங்களை குறைக்கவும், விளைச்சலை யும் மற்றும் பயிரின் தரத் தையும் அதிகரிக்கவும் தர மான ஆலோசனைக் குறிப்பு களை இச்செயலி வழங்கும்’’ என்றார். இதுகுறித்து அறிய விவ சாயிகள் 180-2000-2434 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுக்கலாம் அல்லது www.Bighaat.com வலைதளத்தில் தேவையான தகவலைப் பெறலாம்.