districts

img

சுமைப்பணி தொழிலாளர்களுக்கு நிலுவை தொகை, கூலி உயர்வை வழங்குக! நுகர்பொருள் வாணிபக் கழக பொதுத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

திருச்சிராப்பள்ளி, செப்.30- தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் உள்ள காலிப் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். 2012 பருவகால பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் அயல்துறை அதிகாரிகளை மண்டல மேலாளராக நியமனம் செய்வதை ரத்து செய்ய வேண்டும். சுமைப்பணி தொழி லாளர்களை அவுட்சோர்சிங் முறையில்  நியமனம் செய்வதை ரத்து செய்ய வேண் டும். சுமைப்பணி தொழிலாளர்களுக்கு நிலுவை தொகை மற்றும் கூலி உயர்வு வழங்க வேண்டும்.  கழகப் பயன்பாட்டில் உள்ள நவீன அரிசி  ஆலைகளை தனியாருக்கு தாரை வார்க்க கூடாது. அமுதம் ரேசன் கடைகளை கூட்டுறவு  துறைக்கு மாற்றக் கூடாது. இன்டேண் எரி வாயு பிரிவில் பணிபுரிய கூடிய சிலிண்டர் விநியோகம் செய்யும் பணியாளர்களுக்கு கூலி உயர்வு வழங்க வேண்டும். கணினி பிரிவு ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய  வேண்டும். மாதந்தோறும் சம்பளத்தை கால தாமதம் செய்யாமல் வழங்க வேண்டும்.  நேரடி நெல்கொள்முதல் நிலையங் களில் கொள்முதல் செய்யப்படும் நெல்  மூட்டைகளை கால தாமதமின்றி உடனுக் குடன் இயக்கம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட மாநில மாநாட்டு தீர்மானங்களை விளக்கி சிஐடியு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக பொதுத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் வெள்ளிக்கிழமை தமிழ்நாடு  நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலா ளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மண்டல தலை வர் வேலு தலைமை வகித்தார். ஆர்ப்பாட் டத்தை விளக்கி சங்க மாநில பொருளாளர் ஏழுமலை, மாநில செயலாளர் ராசப்பன், சிஐடியு  மாநகர் மாவட்ட செயலாளர் ரெங்கராஜன், மாவட்ட தலைவர் சீனிவாசன், மாவட்ட துணை தலைவர் சிவக்குமார் ஆகியோர் பேசினர். மண்டல பொருளாளர் சின்னையன் நன்றி கூறினார்.

;