districts

img

வெண்டார் கமிட்டி தேர்தலை உடனே நடத்த கோரி தரைக்கடை வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்

திருச்சிராப்பள்ளி, ஆக. 8- திருச்சி திருவெறும்பூரை  அடுத்த துவாக்குடி பேருந்து நிலையத்தில் உள்ள கழிப்பிடத்தை சீர் செய்து உடனே திறக்க வேண்டும். 15.7.2024 அன்று நடக்க இருந்த வெண்டார் கமிட்டி உறுப்பினர் தேர்தலை உடனே நடத்த வேண்டும். விடுபட்ட தரைக் கடை சங்க உறுப்பினர்களுக்கு விலை இல்லா தள்ளு வண்டி வழங்க வேண்டும். தரைக்கடை சங்க உறுப்பினர்களுக்கு நக ராட்சி அடையாள அட்டை வழங்க வேண்டும். வங்கி கடன் வழங்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி சிஐடியு துவாக்குடி தரைக்கடை வியாபாரிகள் சங்கம் மற்றும் பஸ் ஸ்டாண்ட் வியாபாரிகள் சங்கம் சார்பில் வியாழனன்று துவாக்குடி நகராட்சி அலுவ லகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு தரைக்கடை வியா பாரிகள் சங்க செயலாளர் கருணாநிதி தலைமை வகித்தார். சிஐடியு புறநகர் மாவட்ட செயலாளர் சிவராஜ், சிபிஎம் தாலு கா செயலாளர் மல்லிகா, விவசாய தொழி லாளர்கள் சங்க ஒன்றிய துணைத் தலைவர் முருகேசன், ஒன்றிய செயலாளர் தெய்வ நீதி, ஒன்றிய பொருளாளர் மகாலிங்கம்,  தமிழ்நாடு விவசாய சங்க ஒன்றிய செயலா ளர் குருநாதன் ஆகியோர் பேசினர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் கிரிஜா நன்றி கூறினார்.