districts

img

கனமழையால் விவசாயிகளுக்கு பேரிழப்பு

நாகப்பட்டினம், பிப்.17- அறுவடை தொடங்கிய நிலையில், பருவம் தவறிய கனமழையால் ஏற்பட்ட பேரிழப்பிற்கு அனைத்து விவசாயி களுக்கும் பாகுபாடு இன்றி நிவாரணம் வழங்கக் கோரி நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா அலுவலகங்கள் முன்பும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருக்குவளை தாலுகா அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் வி.மாரிமுத்து கண்டன உரையாற்றினார்.  கீழ்வேளூர் தாலுகா அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினரும் கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினருமான வி.பி.நாகை மாலி கண்டன உரையாற்றினார்.  நாகப்பட்டினம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் சங்க மாநிலத் துணைத் தலைவர் வி.சுப்பிரமணியன் கண்டன உரையாற்றினார்.   வேதாரண்யம் கோட்டாட்சியர் அலுவல கத்திற்கு முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்ட த்தில் விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் கோவை.சுப்பிரமணியன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.வேணு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.