districts

img

12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

திருச்சிராப்பள்ளி, மார்ச் 22 - மின்சார சட்டத் திருத்தம், தொழிலாளர் நல  சட்ட தொகுப்பு ஆகியவற்றை திரும்பப் பெற  வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்க கூடாது. பெட்ரோலிய பொருட்கள் மீதான கலால் வரியை குறைத்து  விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்.  செல்வ வளம் மிக்கவர்களிடம் சொத்து வரி  வசூல் செய்து பொது முதலீட்டை அதிகப் படுத்தி வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்ச  கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு, தொமுச, ஐக்கிய சங்கம், எம்பிளாயீஸ் பெட ரேஷன், இன்ஜினியர் சங்கம், பொறியாளர் கழகம், அண்ணா தொழிற்சங்கம், ஐஎன்டி யுசி மின்வாரிய தொழிற்சங்கங்கள் சார்பில் தென்னூரில் உள்ள திருச்சி மண்டல மின்வா ரிய தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  சிஐடியு மாநகர் மாவட்ட செயலாளர் ரெங்கராஜன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி தொழிற்சங்க நிர்வா கிகள் கண்ணன், தியாகராஜன், சிவசெல்வன்,  ராஜமாணிக்கம், எஸ். கே.செல்வராஜ், அண்ணாதுரை, நடராஜன் ஆகியோர் பேசி னர். இதில் அனைத்து தொழிற்சங்க நிர்வாகி கள் மற்றும் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.  இதே போன்று மன்னார்புரத்தில் உள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவ லகம் முன்பும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

;