திருவாரூர், மார்ச் 22 - நாடாளுமன்ற தேர்தலையொட்டி, திரு வாரூர் மாவட்ட ஆட்சிய ரக அலுவலக வளா கத்தில் “அனைவரும் 100 சதவீதம் வாக்களிப் போம்” என்ற மோட்டார் சைக்கிள் விழிப் புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் தி. சாருஸ்ரீ கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணியில் 150-க்கும் மேற்பட்ட காவலர்கள் பங்கேற்றனர். பேரணியானது மாவட்ட ஆட்சியரக வளாகத்திலிருந்து முக்கிய வீதிகள் வழியாக சென்று விளமல் பகுதியில் முடிவடைந்தது. பின்னர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள வாக்காளர் விழிப்புணர்வு தொடர்பான சுய புகைப்பட பதாகைகளில் மாவட்ட ஆட்சி யர் மற்றும் அரசு அலுவலர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.