districts

img

தேர்தல் விழிப்புணர்வு கோலப் போட்டி

தஞ்சாவூர், மார்ச் 28-  தஞ்சாவூர் மாவட்டத் தில், நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு நேர்மையாக 100 சத வீதம் வாக்களிப்பதை வலி யுறுத்தி, பல்வேறு விழிப் புணர்வு நிகழ்ச்சிகள் நடை பெற்று வருகின்றன. அந்த வகையில், வியா ழனன்று நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக் காளர்கள் நேர்மையாக 100 சதவீதம் வாக்களிக்க வேண்டியதை வலியுறுத்தி  “என் ஓட்டு என் உரிமை” என்னும் விழிப்புணர்வு கோலப்போட்டி, மாநகராட்சி மேல வீதி முதல் பங்காரு காமாட்சி அம்மன் கோயில் வரை நடைபெற்றது.  சுமார் 300-க்கும் மேற்பட்ட பெண்கள், 100  சதவீதம் வாக்களிப்பதன் அவசியத்தை வலி யுறுத்தி வண்ணக் கோலமிட்டு பொதுமக்க ளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சி யில் தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி, வருவாய் கோட்டாட்சியர் இலக்கியா, நகர் நல அலுவலர் மரு.சுபாஷ்  காந்தி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்ட னர்.

;