புதுக்கோட்டை முக்கனி கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில், 2023 தீபாவளி சிறப்பு தள்ளுபடி முதல் விற்பனையை மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா வெள்ளிக்கிழமை துவக்கி வைத்து, புதிய ரகங்களை பார்வையிட்டார். கடந்தாண்டு ரூ.65 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இந்த தீபாவளிக்கு ரூ.1.45 கோடி விற்பனை இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என ஆட்சியர் தெரிவித்தார்.