districts

img

அக்னி பாதை திட்டத்தை திரும்பப் பெறக்கோரி ஆர்ப்பாட்டம்

ஒன்றிய மோடி அரசு ராணுவத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் இளைஞர்களை பணியில் அமர்த்த கூடிய அக்னி பாதை திட்டத்தை திரும்பப் பெறக்கோரி திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகே இடதுசாரி இளைஞர் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநகர் மாவட்ட தலைவர் சுரேஷ் தலைமை வகித்தார். வாலிபர் சங்க மாநில செயலாளர் பாலா, மாவட்ட செயலாளர் லெனின், இந்திய மாணவர் சங்கத்தினர் பலர் கண்டன உரையாற்றினர்.