பாபநாசம் வித்யா பாட சாலையில் இயங்கி வரும் மாற்று திறனாளிகள் பகல் நேர பராமரிப்பு மையத்தில் பயின்று வரும் மாணவர்களின் நலன் கருதி நடை விரிப்பு வழங்கப்பட்டது. பாபநாசம் வித்யா பாடசாலையில் இயங்கி வரும் மாற்றுத் திறனாளி மாணவர்கள் 25 பேரின் நலன் கருதி ராஜகிரி தொழிலதிபர் துரை சண்முக பிரபு வழங்கினார். இதில் பாபநாசம் வட்டார வள மைய மேற்பார்வையாளர் பொறுப்பு முருகன், சிறப்பு ஆசிரியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.