districts

பொதுப் பணித்துறையை கண்டித்து போராட்டம்: பேச்சுவார்த்தையில் தீர்வு

திருச்சிராப்பள்ளி, செப்.27- திருச்சி மாவட்டம் அந்தநல்லூர் ஒன்றியம்  பேரூர் ஊராட்சிக்குட்பட்ட கல்லாங்காட்டு வாய்க்காலில் இருந்து பிரியும் பாசன பெத்த வாய்க்காலை பேரூர் ஓடை வரை தூர்வார வேண்டும். மேக்குடி ஊராட்சிக்குட்பட்ட கடியா குறிச்சி பகுதியில் சர்வே எண்.376 /4-ல் உள்ள புதுவாத்தலை வாய்க்காலை தூர்வார வேண்டும். திருச்சி மாநகராட்சி 35-வது வார்டு பழைய பால்பண்ணை வெங்காய மண்டி பின்புறமுள்ள குழுமி யிலிருந்து வரக்கூடிய வாய்க்காலுக்கு ஷட்டர் அமைத்து தூர்வார வேண்டும் என  பொதுப் பணித்துறையிடம் பலமுறை மனு  கொடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கை யும் எடுக்கவில்லை. இதைக் கண்டித்து திருச்சி நீதிமன்றம் அருகில் உள்ள பொதுப் பணித்துறை அலுவ லகத்தை முற்றுகையிடும் போராட்டம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அகில  இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம்  சார்பில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் தலைமை யில் நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தை யில், 10 நாட்களுக்குள் வாய்க்கால்களை தூர்வாரி உடைந்த ஷட்டர்களை மாற்றுவது என உறுதியளிக்கப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையில் தமிழ்நாடு விவ சாயிகள் சங்க மாவட்ட செயலாளர் கார்த்தி கேயன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் தங்கதுரை, மாவட்ட தலைவர் செல்வராஜ், அந்தநல்லூர் கமிட்டி உறுப்பி னர்கள் முருகன், செல்வமணி, கிளைச் செய லாளர்கள் கடியாக்குறிச்சி ஜோதிமுருகன், வரகனேரி தயாநிதி, கம்பரசம்பேட்டை கர்ணண்  மற்றும் காவல்துறையினர் கலந்து கொண்டனர்.

;