districts

img

சிபிஎம் அரசியல் பயிற்சி வகுப்பு

மயிலாடுதுறை, மார்ச் 27-  மயிலாடுதுறையில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு சார்பில் இரண்டு நாட்கள் நடைபெறும் அரசியல் பயிற்சி வகுப்பு திங்களன்று துவங்கியது.  வகுப்பின் முதல் நாளான திங்களன்று நடைபெற்ற காலை அமர்வுக்கு மாவட்ட  கல்விக்குழு உறுப்பினரும், மாவட்டச் செயற்குழு உறுப்பினருமான ஏ.ரவிச்சந்தி ரன் தலைமை வகித்தார். ‘‘வகுப்புவாத அபாயமும் - சவால்களும்’’ என்ற தலைப் பில் மாநில கல்விக்குழு அ.அன்வர் உசேன் உரையாற்றி வகுப்பெடுத்தார்.  பிற்பகலில் நடைபெற்ற இரண்டாவது அமர்வுக்கு மாவட்டச் செயற்குழு உறுப்பி னர் கே.பி.மார்க்ஸ் தலைமை வகித்தார். ‘‘கட்சி திட்டமும், இடது ஜனநாயக அணி யும்’’ என்ற தலைப்பில் மாநில கல்விக்குழு கன்வீனரும், மாநிலச் செயற்குழு உறுப்பி னருமான என்.குணசேகரன் உரையாற்றி வகுப்பெடுத்தார்.  மாவட்டச் செயலாளர் பி.சீனிவாசன், மாவட்ட கல்விக்குழு கன்வீனர் ஜி.ஸ்டா லின் மற்றும் மாவட்டச் செயற்குழு உறுப்பி னர்கள், ஒன்றியச் செயலாளர்கள், மாவட் டக்குழு, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

;