சிபிஎம் நன்னிலம் ஒன்றியச் செயலாளர் கே.எம்.லிங்கம் இல்ல திருமண விழா பேரளத்தில் புதன்கிழமை நடைபெற்றது. விழாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் திருமணத்திற்கு தலைமை ஏற்று மணமக்கள் கே.எம்.ஜீவராஜா-எல்.சிவசங்கரி ஆகியோர் திருமணத்தை நடத்தி வைத்து வாழ்த்துரை வழங்கினார். மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநிலக் குழு உறுப்பினரும், சட்டமன்ற உறுப்பினருமான நாகை மாலி, சிபிஎம் மாவட்ட செயலாளர்கள் தஞ்சாவூர் சின்னை.பாண்டியன், மயிலாடுதுறை பி.சீனிவாசன் உள்ளிட்ட பலர் மணமக்களை வாழ்த்தி பேசினர்.