districts

img

செப்.7 நாடு தழுவிய மறியல்: சிபிஎம் விளக்கப் பிரச்சாரம்

அரியலூர், செப்.1 - ஒன்றிய அரசின் மக்கள் விரோத, தொழி லாளர்கள் விரோத, விவசாயிகள் விரோத கொள்கைகளை கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் செப்டம்பர் 7 அன்று நாடு தழுவிய மறியல் போராட்டம் நடைபெற உள்ளது. இதையொட்டி, செப்.1 முதல் 7 வரை மாநிலம் தழுவிய பிரச்சார இயக்கம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.  அதன்படி அரியலூர் மாவட்டம் அண்ணா  சிலை அருகே பிரச்சாரம் துவங்கியது. பிரச்சாரத்திற்கு ஒன்றியச் செயலாளர் அருண் பாண்டியன் தலைமை வகித்தார்.  கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.வாலண்டினா, மாவட்டச் செயலாளர் எம். இளங்கோவன், மாவட்டக் குழு உறுப்பி னர்கள் எஸ்.மலர்கொடி, பி.துரைசாமி, மூத்த  தலைவர் ஆர். சிற்றம்பலம், மாதர் சங்க மாவட்ட பொருளாளர் துர்கா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அணைக்குடம் 

அணைக்குடம் கிராமத்தில் கட்சியின் மாவட்டச் செயலாளர் இளங்கோவன் தலை மையில் இருசக்கர வாகனப் பிரச்சாரம் துவங்கியது. பயணத்தில் ஒன்றியச் செய லாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், மாவட்டச் செய லாளர் எம்.இளங்கோவன், மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.செந்தில்வேல் மற்றும் ஒன்றி யக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்ட னர். 

திருச்சிராப்பள்ளி

போராட்டத்தை விளக்கி திருச்சி மலைக் கோட்டை பகுதி குழு சார்பில் பகுதி செயலா ளர் பா.லெனின் தலைமையில் மக்கள் சந்திப்பு பிரச்சாரம் நடந்தது. திருச்சி கீரை கடை பகுதியில் துவங்கி தாராநல்லூர், காம ராஜ் நகர், அண்ணாநகர், சத்தியமூர்த்தி நகர், இபி ரோடு, அம்பேத்கார் சிலை ஆகிய பகுதி களில் தெருமுனை பிரச்சாரம் நடந்தது. மேலும் வீடு வீடாக நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது.  இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரெங்கராஜன், பகுதி குழு உறுப்பினர்கள், கிளை செயலாளர்கள் கலந்து கொண்டனர். 

அம்மாபேட்டை

தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டை பேருந்து நிலையம் அருகே மறியல் விளக்கப்  பிரச்சாரம் நடைபெற்றது. சிபிஎம் ஒன்றியச் செயலாளர் ஏ.நம்பிராஜன் தலைமை வகித் தார். மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி துவக்கி வைத்துப் பேசினார். மாவட்டச் செயற் குழு, மாவட்டக் குழு, ஒன்றியக்குழு உறுப்பி னர்கள் கலந்து கொண்டனர். 

கரூர்

சிபிஎம் கரூர் மாநகரக் குழு சார்பில் காந்திகிராமம், தாந்தோன்றிமலை, ராயனூர்  ஆகிய பகுதிகளில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநகர செயலாளர் எம். தண்டபாணி தலைமை வகித்தார். மாவட்டச்  செயலாளர் எம்.ஜோதிபாசு சிறப்புரையாற்றி னார். மாவட்டக்குழு உறுப்பினர்கள் எஸ்.பி. ஜீவானந்தம், எம்.சுப்பிரமணியன் மற்றும்  மாநகர குழு உறுப்பினர்கள் கலந்துகொண்ட னர்.

குளித்தலை

கட்சியின் குளித்தலை ஒன்றியக் குழு சார்பில் நங்கவரம், குறிச்சி, நெய்த லூர் காலனி ஆகிய பகுதிகளில் தெருமுனை  பிரச்சாரம் நடைபெற்றது. ஒன்றிய செயலா ளர் இரா.முத்துச்செல்வன் தலைமை வகித் தார். மாவட்டச் செயலாளர் மா.ஜோதிபாசு, மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.ராஜூ மற்றும் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

அரவக்குறிச்சி 

அரவக்குறிச்சி ஒன்றியக் குழு சார்பில் பள்ளப்பட்டி ஷா நகரில் தெருமுனைப் பிரச் சாரம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியச் செயலாளர் எம்.ஆறுமுகம் தலைமை வகித் தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சி. முருகேசன், சி.ஆர்.ராஜாமுகமது கோரிக்கை களை விளக்கி பேசினர். ஒன்றியக் குழு உறுப்பினர்கள், கிளைச் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

பேராவூரணியில்  500 பேர் பங்கேற்க முடிவு

இந்த நாடு தழுவிய பிரச்சார இயக்கத்தை யும், மறியல் போராட்டத்தையும் வெற்றிகர மாக நடத்துவதென சேதுபாவாசத்திரம் ஒன்றியக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சேது பாவாசத்திரம் ஒன்றியக்குழு கூட்டம், ஒன்றியக் குழு உறுப்பினர் பி.பெரியண்ணன் தலை மையில் நடைபெற்றது. மாவட்டச் செயற் குழு உறுப்பினர் ஆர்.மனோகரன், ஒன்றியச் செயலாளர் (பொ) ஆர்.எஸ்.வேலுச்சாமி, மூத்த தோழர் வழக்குரைஞர் வீ.கருப்பையா மற்றும் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். செப்டம்பர் 4, 5 தேதிகளில், சேது பாவாசத்திரம் ஒன்றியம் முழுவதும் வீடு வீடாகச் சென்று துண்டுப் பிரசுரங்கள் கொடுத்து  பிரச்சாரம் செய்வது, செப்.7 அன்று பேராவூ ரணி ரயில்வே நிலையத்திலிருந்து ஊர்வல மாக புறப்பட்டு தலைமை தபால் அஞ்சலகம்  முன்பு மறியல் போராட்டம் நடத்துவது, போராட் டத்தில் 500-க்கும் மேற்பட்டோரை பங்கேற் கச் செய்வது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.