districts

img

அரசு மருத்துவமனைகளின் சீர்கேட்டை கண்டித்து மயிலாடுதுறையில் 8 இடங்களில் சிபிஎம் போராட்டம்

மயிலாடுதுறை, டிச.31 - மயிலாடுதுறை மாவட்டம் முழு வதும் உள்ள அரசு மருத்துவமனை கள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலை யங்களின் சீர்கேட்டை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், திங்களன்று 8 இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடை பெற்றன. தரங்கம்பாடி  தரங்கம்பாடி தாலுகா தலைமை மருத்துவமனை சீர்கேட்டை கண்டித்து ஒன்றியக்குழு உறுப்பி னர் கே.குணசேகரன் தலைமை யில், பொறையார் பழைய பேருந்து  நிறுத்தம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்ன தாக, பேரணியாக புறப்பட்டுச் சென்று அரசு மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கட்சியின் ஒன்றியச் செயலாளர் ஏ. ரவிச்சந்திரன் கண்டன உரை யாற்றினார்.   ஆக்கூர்  செம்பனார்கோயில் ஒன்றியம், ஆக்கூர் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தின் நிர்வாகச் சீர்கேட்டைக் கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றியச்  செயலாளர் கே.பி.மார்க்ஸ் தலைமை வகித்தார். மாவட்டக்குழு உறுப்பினர்கள் டி.கண்ணகி, வீ.எம்.சரவணன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.                               சீர்காழி, கொள்ளிடம் சீர்காழி வட்ட தலைமை மருத்துவ மனையின் அவலநிலையை கண்டித்து ஒன்றியச் செயலாளர் வழக்கறிஞர் எஸ்.ஞானபிரகாசம் தலைமையில் நடைபெற்ற போ ராட்டத்தில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஜி.ஸ்டாலின், மாவட்டக் குழு உறுப்பினர் அசோகன் ஆகி யோர் கண்டன உரையாற்றினர்.  அதேபோன்று கொள்ளிடம் ஒன்றியம் திருமுல்லைவாசலில் உள்ள ஆரம்ப சுகாதார நிலைய சீர்கேட்டை கண்டித்தும், மீன்பிடிக்க கடலுக்கு சென்று விபத்தில் பாதிக்கப் படுபவர்களுக்கும், சாலை விபத்து களில் சிக்கி காயமடைபவர்களுக் கும் உரிய சிகிச்சைகளை மேற் கொள்ள வலியுறுத்தி, மாவட்டக் குழு உறுப்பினர் சி.வி.ஆர். ஜீவா னந்தம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  திருமுல்லைவாசல் கடைவீதியி லிருந்து 400-க்கும் மேற்பட்ட மக்கள் பேரணியாக வந்து மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். மாவட்ட செயற்குழு உறுப்பினர்  ப.மாரியப்பன் கண்டன உரையாற்றி னார். கொள்ளிடம் ஒன்றியம், நல்லூரில் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப  சுகாதார நிலையம் முன்பு ஒன்றி யச் செயலாளர் கே.கேசவன் தலை மையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் தில், மாவட்டச் செயற்குழு உறுப்பி னர் எஸ்.துரைராஜ் கண்டன உரை யாற்றினார்.  குத்தாலம், கிளியனூர் குத்தாலம் தாலுகா தலைமை மருத்துவமனை முன்பு மேற்கு ஒன்றியச் செயலாளர் ராமகுரு தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயற் குழு உறுப்பினர்கள் டி.சிம்சன், அமுல்காஸ்ட்ரோ ஆகியோர் கண்டன உரையாற்றினர். கிளியனூர் ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு ஒன்றியச் செயலாளர் சி.விஜய காந்த் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற் குழு உறுப்பினர் ஜி.வெண்ணிலா, மாவட்டக் குழு உறுப்பினர் வைர வன் ஆகியோர் உரையாற்றினர்.  இப்போராட்டங்களில் கட்சியின் மாவட்ட செயற்குழு, மாவட்ட ஒன்றியக் குழு உறுப்பினர்கள், கிளைச்  செயலாளர்கள் பங்கேற்றனர்.