நாகப்பட்டினம், செப்.6 - ஒன்றிய மோடி அரசின் மக்கள் விரோத ஆட்சி, கடுமையான வேலையில்லா திண்டாட் டம், விலைவாசி உயர்வு ஆகியவற்றை கண்டித்து செப்டம்பர் 7 அன்று நாடு தழுவிய மாபெரும் மறியல் போராட்டம் நடைபெற உள்ளது. இப்போராட்டத்தை விளக்கி டெல்டா மாவட்டங்களின் பல்வேறு இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பிரச்சாரம் நடைபெற்றது. நாகப்பட்டினம் மாவட்டத்தின் அனைத்து ஒன்றியங்களிலும் பிரச்சாரக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. திருமருகல் ஒன்றி யம், திட்டச்சேரி பேருந்து நிலையத்தில் நடை பெற்ற வாகன பிரச்சாரக் கூட்டத்தில், கீழ்வே ளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகைமாலி உரையாற்றினார். திருமருகல் ஒன்றி யச் செயலாளர் எஸ்.ஸ்டாலின் பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர். வேதாரண்யம் தெற்கு ஒன்றியத்தில் நடைபெற்ற கூட்டத் தில் கட்சியின் நாகை மாவட்டச் செயலாளர் வி.மாரிமுத்து பேசினார்.
அரியலூர்
அரியலூர் மாவட்டம் முழுவதும் தா. பழூர், ஜெயங்கொண்டம், அரியலூர், ஆண்டிமடம், செந்துறை ஒன்றியங்களில் 60-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 200 மை யங்களில் பிரச்சாரம் நடைபெற்றது. பிரச்சாரத்தின் போது பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த வாகனப் பிரச்சாரம் பொதுமக்கள் மத்தியில் நல்ல ஈர்ப்பை உருவாக்கி இருக்கிறது. இதில் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.வாலண் டினா, மாவட்டச் செயலாளர் எம்.இளங்கோ வன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் இரா.மணிவேல், எம்.வெங்கடாசலம் உள் ளிட்ட பலர் பங்கேற்றனர். ஒன்றியச் செய லாளர்கள் கு.அர்ச்சுனண், ராதா கிருஷ்ணன், அருண்பாண்டியன் உட்பட மாவட்ட, இடைக்குழு உறுப்பினர்கள் பங்கேற் றனர். வியாழனன்று (செப்.7) நடக்கும் அரி யலூர் ரயில் மறியல் போராட்டத்திற்கு எஸ்.வாலண்டினா தலைமை வகிக்கிறார்.
திருவிடைமருதூர்
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தெற்கு ஒன்றியத்தில் திருச்சேறை, செம்மங் குடி, ஆரியசேரி, கீரனூர், பெரப்படிமாத்தூர், கூகூர், நாச்சியார்கோவில், வண்டிப் பேட்டை, திருநறையூர் உள்ளிட்ட 10 இடங்க ளில் சிபிஎம் சார்பில் மக்கள் சந்திப்பு பிரச்சா ரம் நடைபெற்றது. கட்சியின் மாவட்ட செயற் குழு உறுப்பினர் சி.ஜெயபால், ஒன்றியச் செயலாளர் பழனிவேல் மற்றும் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கினர்.
முசிறி
திருச்சி மாவட்டம் முசிறி கைகாட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தெருமுனை பிரச்சார கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சிஐடியு கிருஷ்ணன் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர் நல்லுசாமி உரையாற்றினார்.
நீடாமங்கலம்
நீடாமங்கலம் ஒன்றிய கிராமங்களில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.கந்த சாமி தலைமையில் பிரச்சாரம் நடைபெற் றது. ஒன்றியச் செயலாளர் டி.ஜான் கென்னடி மற்றும் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கரூர் கரூர் மாவட்டத்தில், கட்சியின் கடவூர் வட்டக் குழு சார்பில் தரகம்பட்டி, பாலவிடுதி, கடவூர் பேருந்து நிறுத்தம் முன்பு நடை பெற்ற தெருமுனைப் பிரச்சாரக் கூட்டத்திற்கு வட்டக் குழு உறுப்பினர் பி.வேல்முருகன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் மா. ஜோதிபாசு மற்றும் மாவட்ட செயற்குழு உறுப் பினர்கள், வட்டச் செயலாளர் பி.பழனிவேல்
ஆகியோர் பேசினர்.
கரூர் ஒன்றிய குழு சார்பில் நொய்யல் குறுக்கு சாலையில் நடைபெற்ற தெரு முனைக் கூட்டத்திற்கு ஒன்றியக்குழு உறுப்பி னர் கந்தசாமி தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.ஜீவானந்தம், ஒன்றிய செயலாளர் எம்.ராஜேந்திரன் ஆகி யோர் பேசினர். கரூர் மாநகர குழு சார்பில் லைட் ஹவுஸ் கார்னர், புலியூர், வெள்ளியணை கடை வீதி களில் நடைபெற்ற பிரச்சாரத்திற்கு கிளைச் செயலாளர் பெரியசாமி தலைமை வகித்தார். வெள்ளியணையில் நடைபெற்ற கூட்டத் திற்கு மாநகரக் குழு உறுப்பினர் எஸ்.பி.ரா ஜேந்திரன் தலைமை வகித்தார். மாவட்டக் குழு உறுப்பினர் ஆர்.ஹோச்சுமின், எஸ்.பி. ஜீவானந்தம், மாநகரச் செயலாளர் எம்.தண்டபாணி ஆகியோர் பேசினர். கிருஷ்ணராயபுரம் ஒன்றியக் குழு சார்பில் மாயனூர், கிருஷ்ணராயபுரம் பேருந்து நிறுத்தத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு ஒன்றியச் செயலாளர் தர்மலிங்கம் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.ராஜூ, மாவட்டக் குழு உறுப்பினர் வழக்க றிஞர் சரவணன், விச மாவட்ட பொருளாளர் சுப்பிரமணியன் ஆகியோர் பேசினர். அரவக்குறிச்சி ஒன்றிய குழு சார்பில் பள்ளப்பட்டி, அண்ணாநகர், ஈச்சநத்தம் கடை வீதியில் நடைபெற்ற கூட்டத்திற்கு ஒன்றி யச் செயலாளர் எம்.ஆறுமுகம் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு, மாவட்டக் குழு உறுப்பினர்கள் பேசினர்.