districts

img

திருவாரூரில் சிபிஎம் பேரவை

திருவாரூர், ஜூலை 22 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய, மாநில முடிவுகள் விளக்கப் பேரவை திருவாரூர் வர்த்தக சங்கத்தில் திருவாரூர் மாவட்டக் குழு சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பேரவைக்கு சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி தலைமை வகித்தார். மாநிலக் குழு முடிவுகளை விளக்கி மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் உரையாற்றினார். மத்தியக் குழு முடிவுகளை விளக்கி மத்தியக் குழு உறுப்பினர் பெ.சண்முகம் சிறப்புரையாற்றினார்.  சிபிஎம் மாவட்ட செயற்குழு, மாவட்டக் குழு உறுப்பினர்கள், திருவாரூர், நீடாமங்கலம், வலங்கைமான், குடவாசல், நன்னிலம் ஆகிய ஒன்றிய, நகரச் செயலாளர்கள் மற்றும்  உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.