districts

img

தோழர் செல்வராணி காலமானார்

திருவாரூர், ஏப்.7- திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியம் திருக் கண்ணமங்கையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  மூத்த உறுப்பினரும், அகில இந்திய விவசாயத் தொழிலா ளர் சங்கத்தின் மாவட்ட துணைச் செயலாளருமான ஆர்.மணி யனின் துணைவியார், சிபிஎம் உறுப்பினர் ஆர்.எம்.செல்வ ராணி உடல் நலக்குறைவால் சனிக்கிழமை காலமானார்.  அவரது மறைவுச் செய்தி அறிந்து சிபிஎம் மாவட்டச் செய லாளர் ஜி.சுந்தரமூர்த்தி, மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் எம். சேகர், விவசாயத் தொழிலாளர்கள் சங்க மாவட்டச் செயலா ளர் பி.கந்தசாமி ஆகியோர் அம்மையாரின் உடலுக்கு மாலை  அணிவித்து அஞ்சலி செலுத்தினர். சிபிஎம் கொரடாச்சேரி ஒன்றியச் செயலாளர் டி.ஜெயபால்  மற்றும் ஒன்றியக் குழு உறுப்பினர்கள், வர்க்க வெகுஜன அரங்கத்தினர் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற இறுதி நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.