திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகரக் குழு சார்பில், தோழர் நன்மாறன் நினைவு தினம் கடைப்பிடிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு நகரச் செயலாளர் ஜி.தாயுமானவன் தலைமை வகித்தார். தோழர் நன்மாறன் உருவப்படத்திற்கு மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மாவட்ட செயற்குழு, மாவட்டக் குழு உறுப்பினர்கள் மற்றும் ஒன்றியச் செயலாளர் கே.ஜெயபால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.