districts

img

தோழர் என்.சங்கரய்யா படத்திறப்பு, புகழஞ்சலி நிகழ்ச்சி

புதுக்கோட்டை, டிச.8 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்டக் குழு சார்பில்  சுதந்திரப் போராட்ட வீரர், இந்திய பொது வுடமை இயக்கத்தின் முதுபெரும் தலைவர், தகைசால் தமிழர் தோழர்  என்.சங்கரய்யா படத்திறப்பு மற்றும்  புகழ் அஞ்சலி நிகழ்ச்சி புதுக்கோட்டை  கட்சி அலுவலகத்தில் வெள்ளிக் கிழமை நடைபெற்றது.  நிகழ்ச்சிக்கு கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் தலைமை  வகித்தார். தோழர் என்.சங்கரய்யா வின் உருவப்படத்தை கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் என்.குண சேகரன் திறந்து வைத்து புகழஞ்சலி உரையாற்றினார். மாநிலக்குழு உறுப்பி னரும், கந்தர்வக்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான எம்.சின்ன துரை, மூத்த தோழர் எம்.ஜியா வுதீன் ஆகியோர் புகழஞ்சலி உரை யாற்றினர். மாவட்ட செயற்குழு மற்றும் மாவட்டக் குழு உறுப்பினர்கள், ஒன்றியச் செயலா ளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.  நாகப்பட்டினம் நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வே ளூர் வடக்கு ஒன்றியம் சார்பில் என்.சங்க ரய்யா நினைவேந்தல் பேரவை நடை பெற்றது. ஒன்றியச் செயலாளர் என்.எம்.அபுபக்கர் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் வி.மாரிமுத்து, தோழர் சங்கரய்யா உருவப்படத்தை திறந்து வைத்து புகழஞ்சலி உரை யாற்றினார். மாவட்டக் குழு உறுப்பி னர்கள் எஸ்.பாண்டியன்,எஸ்.துரைராஜ்  ஆகியோர் கலந்து கொண்டனர். நாகை தெற்கு ஒன்றியம் சார்பில்  நடந்த நிகழ்ச்சியில், மாவட்ட செயற் குழு உறுப்பினர் எம்.முருகையன் தோ ழர் சங்கரய்யா உருவப்படத்தை திறந்து  வைத்து புகழஞ்சலி செலுத்தினார். ஒன்றியச் செயலாளர் ஏ.வடிவேல் தலைமை வகித்தார். மாவட்டக் குழு உறுப்பினர்கள் கே.செந்தில்குமார், சி. மாலா உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர்.