districts

img

புகார் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத காவல்துறையை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாலை மறியல்

திருத்துறைப்பூண்டி, செப். 4-  திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே, மேட்டுப்பாளையம் ஊராட்சியில்  ரூபன், அனுபவத்தில் உள்ள நிலத்தில் தென்னங்கன்றுகள் வைத்துள்ளதை இரவு நேரங்களில் சமூகவிரோதிகள் திருடி உள்ளனர். திருத்துறைப்பூண்டி காவல் நிலையத்தில் புகார் மனு கொடுத்து,ம் காவல்துறை நடவடிக்கை எடுக்காததால் மன்னார்குடி சாலையில் மேட்டுப்பாளையம் கடைவீதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ஐவி. நாகராஜன் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.  இந்நிகழ்வில் ஒன்றியக் குழு உறுப்பினர் ஆர். மதியழகன் முன்னிலை வகித்தார், ஒன்றியச் செயலாளர் டி.வி. காரல்மார்க்ஸ், என். வீராச்சாமி, வீரசேகரன்,  என். சுந்தரேசன், விளக்குடி கிளைச் செயலாளர் நாக. அறிவழகன், மேட்டுப்பாளையம் கிளைச் செயலாளர் சிவபுண்ணியம், முருகம்பாளையம் கிளைச் செயலாளர் பி.அறிவு மற்றும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.  தகவல் அறிந்த காவல்துறை மற்றும் வருவாய்த்துறையினர் நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதன் அடிப்படையில், தற்காலிகமாக சாலை மறியல் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.