districts

img

விவசாயிகளின் விடிவெள்ளி தோழர் பி.சீனிவாசராவ் நினைவு தினம் கடைப்பிடிப்பு

திருச்சிராப்பள்ளி, செப்.30 - ஒடுக்குமுறைக்கு எதிராக, சாணிப் பால் சவுக்கடிக்கு எதிராகவும், தஞ்சை தரணியில் அடித்தட்டு மக்களின் உரி மைகளை வென்றெடுத்த வர்க்க போராளி தோழர் சீனிவாச ராவ் நினைவு தினம் திங்களன்று கடைப் பிடிக்கப்பட்டது. இதையொட்டி திருச்சி புறநகர் மாவட்ட, அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க திருவெறும்பூர் தாலுகா குழு சார்பில் எம்.முருகே சன் தலைமையில், தோழர் சீனி வாசராவ் உருவப்படத்திற்கு மாலை  அணிவித்து புகழ் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் சிபிஎம் ஒன்றிய செயலாளர் மல்லிகா, அகில  இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தி னர். புதுக்கோட்டை புதுக்கோட்டை அண்ணாசிலை அருகே நடைபெற்ற கூட்டத்திற்கு அகில இந்திய விவசாயத் தொழிலா ளர் சங்க மாவட்டச் செயலாளர் டி. சலோமி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செய லாளர் சி.ஜீவானந்தம் ஆகியோர் தலைமை வகித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செய லாளர் எஸ்.கவிவர்மன், விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலச் செயலா ளர் எஸ்.சங்கர் ஆகியோர் புக ழஞ்சலி உரையாற்றினர். விதொச  மாவட்டப் பொருளாளர் கே.சண்முகம் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். தஞ்சாவூர் தஞ்சாவூர் மாவட்டம் கணபதி நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மாவட்டக் குழு அலுவ லகத்தில், பி.எஸ்.ஆர் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்விற்கு, கட்சியின் மாவட்டச் செய லாளர் சின்னை.பாண்டியன் தலைமை வகித்தார். மூத்த தலைவர் என்.சீனிவாசன், தோழர் பி.எஸ்.ஆர்  குறித்து புகழஞ்சலி உரையாற்றி னார். இதில், மாவட்டச் செயற்குழு, மாவட்டக் குழு உறுப்பினர்கள் கலந்து  கொண்டனர்.

திருவாரூர்

திருவாரூர் மாவட்டம், திருத்து றைப்பூண்டி- மன்னார்குடி சாலை யில் உள்ள மக்கள் போராளி பி.எஸ்.ஆர் உருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்து செவ்வணக்கம் செலுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின் மாவட்டச் செயலா ளர் எம்.சேகர், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பி.கந்தசாமி ஆகியோர் தலைமை வகித்தனர்.  நிகழ்ச்சியில் சிபிஎம் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தம் செங்கொடியை ஏற்றினார். விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் கொடியை மாநிலத் துணைச் செயலாளர் எம்.முருகை யன் ஏற்றினார். தமிழ்நாடு விவசாய  சங்கத்தின் மாநில பொதுச் செயலா ளர் சாமி.நடராஜன் பங்கேற்றார். இதனைத் தொடர்ந்து மக்கள் போற்றும் மகத்தான தலைவர் பி. சீனிவாசராவின் உருவச் சிலைக்கு கட்சியின் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தம் கொடியேற்றி வீரவணக்கம் செலுத்தினார். தொடர்ந்து சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி. நாகராஜன், மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி, சிஐடியு மாவட்டச் செயலாளர் டி.முருகையன், விவசா யிகள் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.தம்புசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருத்துறைப்பூண்டி தெற்கு ஒன்றியச் செயலாளர் டி.வி. காரல் மார்க்ஸ், நகரச் செயலாளர் எம்.கோபு, திருத்துறைப்பூண்டி நகர்மன்ற துணை தலைவர் எம்.ஜெயபிரகாஷ் உள்ளிட்ட மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தி னர். தொடர்ந்து தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள், தோழர்கள் திரளாக சென்று முள்ளியாற்றங்கரையில் அமைந்துள்ள பி.சீனிவாசராவ் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். இதில் சிபிஐ திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சுப்பராயன், நாகை நாடாளுமன்ற உறுப்பினர் வை.செல்வராஜ், சிபிஎம் நாடாளு மன்ற உறுப்பினர் ஆர்.சச்சிதானந் தம் மற்றும் சிபிஎம் தேசிய நிர்வாக குழு உறுப்பினர் கோ.பழனிச்சாமி உட்பட சிபிஎம்-சிபிஐ தலைவர்கள் மலர் தூவி வீரவணக்கம் செலுத்தி னர்.  திங்களன்று மாலை திருத்து றைப்பூண்டி தெற்கு வீதியில் பி.எஸ்.ஆர். நினைவு தினத்தையொட்டி பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்டத்தின் பல்வேறு இடங் களில் தோழர் பி.எஸ்.ஆர். நினைவு தினக் கொடியேற்றப்பட்டது.