தஞ்சாவூர், அக்.27- தமிழ்நாடு முழுவதும் வெள்ளிக் கிழமை வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி டெல்டா மாவட்டங்களிலும் வரைவு வாக்காளர் பட்டியல்கள் வெளியிடப் பட்டன. தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட வரு வாய் அலுவலர் தெ.தியாகராஜன் வெள்ளிக்கிழமை வரைவு வாக்கா ளர் பட்டியலை வெளியிட்டார். தற்போது வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலின்படி தஞ்சாவூர் மாவட்டத்தில் 9,74,896 ஆண் வாக்காளர்களும், 10,25,988 பெண் வாக்காளர்களும், 156 இதர பாலினத்தவர்கள் உட்பட மொத்த வாக்காளர்கள் 20,01,040 பேர் உள்ளனர். புதுக்கோட்டை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் ஒருங்கிணைக்கப் பட்ட வரைவு வாக்காளர் பட்டிய லினை, மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா வெளியிட்டார். மாவட்டத்தில் 6,51,559 ஆண் வாக்கா ளர்கள், 6,64,175 பெண் வாக்கா ளர்கள், 64 மூன்றாம் பாலினத்த வர்கள் என மொத்தம் 13,15,798 வாக்காளர்கள் உள்ளனர். 5.1.2023 முதல் 15.9.2023 வரை நடைபெற்ற 2023 ஆம் ஆண்டிற்கான தொடர் திருத்தத்தில் மொத்தம் 35,995 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். திருவாரூர் திருவாரூர் மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறைத் திருத்தம்-2024 வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் அலுவலருமான தி.சாருஸ்ரீ வெளியிட்டார். மயிலாடுதுறை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சி யர் அலுவலக கூட்டரங்கில் வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி வெளி யிட்டார். கரூர் கரூர் மாவட்ட ஆட்சியர் அலு வலக கூட்டரங்கில், வாக்காளர் பட்டி யல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 2024 வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான மீ.தங்க வேல் வெளியிட்டார். மாவட்டத்தில் 4,20,313 ஆண் வாக்காளர்களும், 4,52,043 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர்கள் 67 பேரும் என மொத்தம் 8,72,423 வாக்கா ளர்கள் உள்ளனர்.