அறந்தாங்கி, செப்.29 - கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தஞ்சா வூர் கிழக்கு கடற்கரை சாலை யில் அக்.1 அன்று, ஒரு கோடி பனை விதைகள் நடும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதற்காக புதுக் கோட்டை மாவட்டம் அறந் தாங்கி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் வீ.பாலமுருகன் தலை மையில், சிறுமருதூர் ஊராட்சி மன்ற தலைவர் எம். கல்யாணசுந்தரம் முன்னி லையில். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் செந்தில் குமார், சுற்றுச்சூழல் ஆர்வ லர் யூனூஸ், கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் சுமார் 10,000 பனை விதைகளை சேகரித்து கடற்கரை பகுதிகளுக்கு அனுப்பி வைத்தனர்.