தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ரிவர் சிட்டி ரோட்டரி கிளப், வலங்கைமான் அறம் அறக்கட்டளை இணைந்து கல்லூரி மாணவிகளுக்கு கல்விக் கட்டணம், புத்தாடைகள் வழங்கும் நிகழ்ச்சியை நடத்தின. ரோட்டரி வருங்கால கவர்னர் லியோன், மாணவிகளுக்கு கல்வி கட்டணத்தையும், புத்தாடைகளையும் வழங்கினார். இதில் அறம் அறக்கட்டளை தலைவர் மனோகரன், துணைத் தலைவர் மலர்விழி, ரிவர் சிட்டி ரோட்டரி கிளப் தலைவர் கனிராஜ், செயலர் அப்துல் ரசீது, பொருளாளர் குருமூர்த்தி, முன்னாள் தலைவர்கள் பங்கேற்றனர்.