districts

img

சிட்டி யூனியன் வங்கி ரூ.93 கோடி வர்த்தகம்

மன்னார்குடி, பிப்.14- 2022-23-ஆம் நிதியாண்டில் மட்டும் சிட்டி யூனியன் வங்கி ரூ.93,003 கோடி வர்த்தகம் செய்துள்ளது என வங்கியின் இயக்குநர் காமகோடி தெரிவித்துள்ளார்.  சிட்டி யூனியன் வங்கியின் 2022-2023-ஆம் நிதியாண்டின் மூன்றாம் காலாண்டு கணக்கு முடிவுகளை வங்கியின் நிர்வாக இயக்குநர் காமகோடி வெளியிட்டு கூறியதாவது:  நடப்பு நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் வங்கியின் மொத்த வருமா னம் ரூ.1430 கோடியாகவும், அதில் இதர வருமானம் ரூ.224 கோடியாகவும் உள்ளது. மொத்த லாபம் ரூ.497 கோடியாகவும், நிகர லாபம் ரூ.218 கோடியாகும். நடப்பு நிதியாண்டின் முதல் 9 மாதங்களில் வங்கியின் மொத்த வியாபாரம் ரூ.93,000 கோடியாகவுள்ளது. மேலும் வங்கியின் வைப்பு தொகை மற்றும் கடன்கள் முறையே ரூ.49,997 கோடியாகவும், ரூ.43,009 கோடியாகவும் உள்ளது.  மேலும் டிசம்பர் மாதத்துடன் முடிந்த 9 மாதங்களில் வங்கியின் மொத்த வருமானம் ரூ.4,102 கோடியாகவும்  அதில் இதர வருமானம் ரூ.615 கோடியாகவும், மொத்த லாபம் ரூ.1,400 கோடியாகவும், நிகர லாபம் ரூ.719 கோடியாகவும் உள்ளது.  வங்கியின் நிகர வராக்கடன் 2.67 சதவீத மாகவும், வங்கியின் சொத்தின் மீதான வருவாய் 1.51 சதவீதமாகவும் உள்ளது.  வங்கியின் நிகர மதிப்பு கடந்த ஆண்டில் இருந்த மதிப்பான ரூ.6,335 கோடி யில் இருந்து ரூ.7,193 கோடியாக உயர்ந்து ள்ளது. மேலும் வங்கி இன்று வரை 752 கிளைகள் மற்றும் 1,681 தானியங்கி பட்டு வாடா இயந்திரங்களை கொண்டு செயல் பட்டு வருகிறது.  இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.