districts

img

சிஐடியு மாநிலக்குழு பாராட்டு

கரூர் மாமன்ற உறுப்பினரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாநகரச் செயலாளருமான எம்.தண்டபாணியின் குழந்தைகள் பூமிதா, கார்த்திகேயன் ஆகியோர் சென்னை அயனாவரம் நிர்மல் பள்ளிக்கு, தனது உண்டியலில் சேமித்து வைத்திருந்த சேமிப்புத் தொகை ரூ.20 ஆயிரத்தை நிதியாக வழங்கினர். இந்நிலையில் அக்.31 அன்று நடைபெற்ற சிஐடியு கரூர் மாவட்ட பேரவையின் போது, சிஐடியு மாநிலக் குழு சார்பாக மாநில துணைத் தலைவர் ஆர்.சிங்காரவேலு இந்தக் குழந்தைகளுக்கு புத்தாடைகள் வழங்கிப் பாராட்டினார்.