districts

img

அரசாணைப்படி ஊதியம் சிஐடியு வலியுறுத்தல்

ஈரோடு, ஜூலை 8- தூய்மைப் பணியாளர்களுக்கு அரசா ணைப்படி அகவிலைப்படியுடன் ஊதி யம் வழங்க வேண்டும் என சிஐடியு முறையிட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் ஒரு மாநக ராட்சி, கோபி, சத்தி, பவானி, புன்செய் புளியம்பட்டி ஆகிய நகராட்சிகள், 42 பேரூராட்சிகள், 225 கிராம ஊராட் சிகள் உள்ளன. இவற்றில் ஈரோடு மாந கராட்சி மற்றும் கோபி நகராட்சியில் மட் டும் சுமார் 400 பேர் பொதுசுகாதாரப் பிரி வில் பணி நிரந்தரம் பெற்ற தூய்மைப் பணியாளர்களாக பணியில் உள்ளனர். ஏனையோர் பேரூராட்சிகள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளில் ஒப்பந்த அடிப்படையிலும், தினக்கூலி அடிப்ப டையிலும் பணி நிரந்தரமின்றி பணி யாற்றி வருகின்றனர். இவர்களுக்கு குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின்படி அகவிலைப்படியுடன் சேர்த்து ஊதி யம் வழங்க வேண்டும். அரசு அகவி லைப்படியை ஆண்டுதோறும் நிர்ண யம் செய்து வெளியிடுகிறது. அதனடிப் படையில் திறன் பெற்ற, திறனற்ற மற் றும் கிரேடு அடிப்படையில் அடிப்டை ஊதியத்துடன் அகவிலைப்படியும் சேர்த்து ஊதியம் வழங்கப்பட வேண் டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி, சிஐடியு ஈரோடு மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி ஊழியர் சங்கத்தின் தலைவர் எஸ்.சுப்ர மணியன் தலைமையில் திங்களன்று ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் மனு  அளித்தனர். இதில், சிஐடியு மாவட்டச் செயலாளர் எச்.ஸ்ரீராம், சங்கத்தின் செய லாளர் எஸ்.மாணிக்கம்,  பொருளாளர் ஜெகநாதன் மற்றும் திரளான ஊழி யர்கள் உடனிருந்தனர்.