districts

img

தூய்மைப் பணியாளர்களை தனியார்மயப்படுத்தக் கூடாது! சிஐடியு கண்டன ஆர்ப்பாட்டம்

அறந்தாங்கி, ஜன.12 - நகராட்சி தூய்மை பணி யாளர்களை அவுட்சோர்சிங் மூலம் தனியார்மயப்படுத்தக் கூடாது. ஆட்குறைப்பு செய்யக் கூடாது. ஒட்பந்த தினக்கூலி, சுய உதவிக்கும் தூய்மை பணியாளர்களை நிரந்திரமாக்க வேண்டும். கொரோனா ஊக்கத் தொகை ரூ.15 ஆயிரம் அனைத்து தரப்பு ஊழியர்களுக்கும் வழங்க  வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகளை நிறைவேற்ற வலி யுறுத்தி புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகராட்சி அலுவலகம் முன்பு  உள்ளாட்சி துறை தொழிலா ளர்கள் சங்கத்தின் (சிஐடியு) தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  சங்க தலைவர் கவி பாலா தலைமை வகித்தார். செயலாளர் மாணிக்கம் முன் னிலை வகித்தார். சிஐடியு மாவட்ட தலைவர் க.முகம தலி ஜின்னா, சிபிஎம் தாலுகா செயலாளர் தென்றல்  கருப்பையா, மாவட்டக் குழு  உறுப்பினர் தங்கராஜ் உள்ளிட்டோர் பேசினர்.