districts

img

கொன்னக்காட்டில் மாட்டு வண்டி எல்கை பந்தயம்

அறந்தாங்கி,ஜூலை 10- புதுக்கோட்டை மாவட்டம்  அறந்தாங்கி யை அடுத்த கொன்னக்காடு கிராமத்தில் உள்ள ஸ்ரீ சக்தி விநாயகர் மற்றும் ஸ்ரீ அரிய நாயகி அம்பாள் மது எடுப்பு விழாவை முன்னிட்டு  கிராமத்தார்கள் மற்றும் இளை ஞர்கள் சார்பாக ஐந்தாம் ஆண்டு மாபெரும் வெள்ளி தார் கம்புக்கான மாட்டு வண்டி எல்கை  பந்தயம் நடைபெற்றது இந்த போட்டியில் மதுரை, திருச்சி, தஞ்சாவூர்,புதுக்கோட்டை,  இராமநாத புரம், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட 100-க்கும் மேற்பட்ட மாடுகள் கலந்து கொண்டன, இதில் பெரிய மாடு, சிறிய மாடு என இரண்டு பிரிவுகளாக போட்டி நடை பெற்றது  போட்டியில் ஒவ்வொரு பிரிவி லும் முதல் மூன்று இடங்களை வென்ற  மாடுகளின் உரிமையாளர்களுக்கு 1லட்சத்து 22 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசும் கோப்பைகளும்  வெள்ளி தார்  கம்பும் வழங்கப்பட்டது.பந்தய நிகழ்ச்சியை சாலையின் இரு புறமும் நின்று ஆயிரக்க ணக்கான ரசிகர்கள் கண்டு ரசித்தனர். நாகுடி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.