தஞ்சாவூர், ஜன.11- தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி ஒன்றியம், நெய்வவிடுதி கிராமத்தில், சாதி மறுப்பு காதல் திருமணம் செய்து கொண்ட ஐஸ்வர்யா என்ற பெண்னை பெற்றோரே ஆணவப் படுகொலை செய்த கொடுமையை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தஞ்சை மாவட்டக் குழு வன்மையாக கண்டித்துள்ளது. இதுகுறித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் சின்னை. பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: பட்டுக்கோட்டை தாலுகா, பேராவூரணி ஒன்றியம், நெய்வவிடுதி கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் மகள் ஐஸ்வர்யா பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர். அருகில் உள்ள பூவாளூர் கிராமத்தில் பாஸ்கர் மகன் நவீன் (இன்ஜினியரிங் படித்த வர்) பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர். இருவரும் பள்ளிப் பருவத்தில் இருந்தே காதலித்துள்ளனர். இருவரும் திருப்பூரில் வேலை பார்த்துள்ளனர். டிசம்பர் 31ஆம் தேதி இருவருக்கும் திருமணம் நடை பெற்றுள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத காவல்துறை இதை அறிந்த ஐஸ்வர்யாவின் பெற்றோர் பல்லடம் காவல் நிலையத்திற்கு சென்று மகளைக் காணவில்லை என்று புகார் கொடுத்துள்ளனர். பல்லடம் காவல் நிலைய அதிகாரிகள் நவீனையும், ஐஸ்வர் யாவையும் தேடி, ஐஸ்வர்யாவை மட்டும் அழைத்து வந்தனர்.
தமிழகத்தில் சாதி மறுப்பு திருமணம் செய்யும் காதலர்கள் ஆணவப் படுகொலை செய்கின்ற கொடு மையை அறிந்திருந்தும், உயர் நீதிமன்றத் தின் மதுரை கிளை உத்தரவை பின்பற்றா மல், ஐஸ்வர்யாவை வலுக்கட்டாயமாக பெற்றோருடன் அனுப்பி வைத்துள்ளனர். ஜனவரி 2ஆம்தேதி இரவு பெற்றோர், உறவினர்கள் சேர்ந்து ஐஸ்வர்யாவை படு கொலை செய்து 3ஆம்தேதி அதிகாலை எரித்துள்ளனர். பிறகு நவீன் அளித்த புகாரின் பேரில் வாட்டாத்திக்கோட்டை காவல்துறை மற்றும் ஒரத்தநாடு டி.எஸ்.பி விசாரணை நடத்தி வழக்கு பதிந்து ஐஸ்வர்யாவின் தாய், தந்தையை கைது செய்துள்ளனர். பல்லடம் காவல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்திடுக ஐஸ்வர்யாவின் படுகொலையை பல்ல டம் காவல்துறையினர் தடுத்து ஐஸ் வர்யாவை பாதுகாத்திருக்க முடியும். நீதி மன்ற உத்தரவை காவல்துறையே மதிக் காததால் படுகொலை நடந்துள்ளது. மிக கொடூரமாக நடந்துள்ள ஆணவப்படு கொலையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் தஞ்சை மாவட்டக்குழு வன்மை யாக கண்டிக்கிறது. இந்த ஆணவப் படு கொலையில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட வேண்டும். இந்த ஆணவப் படுகொலைக்கு காரணமான பல்லடம் காவல் நிலைய அதிகாரிகள் மீதும் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வழக்கில், எஸ்சி., எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டப்பிரிவுகளை தஞ்சை மாவட்ட காவல்துறை சேர்க்க வேண்டும். மேலும், தமிழக அரசு ஆணவ படு கொலையை தடுப்பதற்கு சிறப்பு தனிச் சட்டத்தை இயற்ற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.