முசிறி, பிப்.28 - திருச்சி மாவட்டம் முசிறி நகராட்சியில் வழக்கறிஞர் சங்க தேர்தல் சனிக்கிழமை நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் மூத்த வழக்கறிஞர் பாஸ்கரன் தலைவ ராக தேர்ந்தெடுக்கப்பட்டார். துணைத் தலைவர் பதவிக்கு வழக்கறிஞர்கள் கணேசன், கார்த்திக் ஆகியோர் போட்டி யிட்டதில், கணேசன் துணைத் தலைவராக தேர்ந்தெடுக் கப்பட்டார். செயலாளர் பதவிக்கு வழக்கறிஞர்கள் சந்திரசேக ரன், சுகுமார், ஆசைத்தம்பி ஆகியோர் போட்டியிட்டனர். இதில் செயலாளராக டி.சந்திரசேகரன் தேர்ந்தெடுக்கப்பட் டார். பொருளாளராக மு.ரெங்கராஜ், இணைச் செயலாளராக தமிழ்ச்செல்வன் ஆகியோர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப் பட்டனர். சங்கத் தேர்தலை அலுவலர்களான வழக்கறிஞர் கள் துரை செல்வம், முருகானந்தம் ஆகியோர் நடத்தினர். வெற்றி பெற்றவர்கள் திங்கள்கிழமை பதவி ஏற்றுக் கொண்ட னர்.