districts

img

மல்லர் கம்ப விளையாட்டு மாணவர், ஆசிரியருக்கு விருது

சின்னாளப்பட்டி, மார்ச் 10-  திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை யில் அரசு உதவி பெறும் நாடார் உயர்  நிலைப்பள்ளியில் பாரம்பரிய கலைகளை மீட்க பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.  இதில் தமிழர்களின் முக்கிய போர்க் கலைகளில் ஒன்றான மல்லர் கம்பம் வீர  விளையாட்டிற்கு பிரத்யேக பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இதில் பயிற்சி பெற்று வரும் மாணவர்கள் தமிழகம் மட்டு மின்றி நாடு முழுவதும் பல்வேறு போட்டி களில் கலந்துகொண்டு வெற்றி வாகை சூடி  வருகின்றனர்.  இவர்களை அங்கீகரித்து ஊக்கு விக்கும் வகையில் தமிழக அரசின் கலை  பண்பாட்டு துறை சார்பில் மல்லர் கம்பத்தில்  சிறந்து விளங்கும் நிலக்கோட்டையில் அரசு  உதவி பெறும் நாடார் உயர்நிலைப்பள்ளி 10-ஆம் வகுப்பு மாணவர் முத்தையாவிற்கு கலைஇளமணி விருதும், பயிற்சியளித்த உடற்கல்வி ஆசிரியர் நாகராஜிற்கு கலை  வளர்மணி விருதும் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தலைமையில் நடந்த விழா வில், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி, பழனி சட்டமன்ற உறுப்பி னர் ஐ.பி.செந்தில் குமார் ஆகியோர் வழங்கி னர். அவர்களுக்கு பள்ளி தலைமை ஆசிரி யர் உட்பட இதர ஆசிரியர்கள், பொது மக்கள், சமூக ஆர்வலர்கள் பாராட்டு களை தெரிவித்தனர்.