திருச்சி புறநகர் மாவட்ட சிஐடியு ஆட்டோ தொழிலாளர் சங்க புதிய கிளை துவக்க விழா மண்ணச்சநல்லூர் மேற்கு பகுதி திருவள்ளெறையில் சனிக்கிழமை நடைபெற்றது. விழாவிற்கு ஜான் கென்னடி தலைமை வகித்தார். சங்க கொடியை சிஐடியு மாவட்ட செயலாளர் சிவராஜ் ஏற்றினார். பெயர் பலகையை ஆட்டோ சங்க மாவட்ட செயலாளர் சம்பத் திறந்து வைத்தார். விழாவில் மாவட்ட பொருளாளர் சேகர், மாவட்ட குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.