districts

img

அரியலூர் சிபிஎம் நிதி திரட்டல்

அரியலூர், ஜன. 5 - மக்களை சந்தித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரியலூர் மாவட்டச் செயலாளர் இளங்கோவன், மாவட்ட  குழு உறுப்பினர் சுப்பு, கார்த்திக், மாவட்ட குழு உறுப்பினர்  எஸ்.பி.சாமிதுரை, லெட்சுமணன், ஒன்றிய குழு உறுப்பினர் மாணிக்கம் ஆகியோர் மேற்கு வார்டுகளில் கட்சி நிதி வசூல்  செய்தனர்.  சிபிஎம் ஒன்றிய செயலாளர் இரா.புனிதன், ஜேஸ்டின், ராஜா, கிளை செயலாளர் கனேசன், ஒன்றிய குழு உறுப்பி னர் ஞானபிரகசம், கிளை செயலாளர் பார்த்திபன், 2 குழு வாக நிதி வசூல் செய்தனர். மக்கள் நலனில் அக்கறை கொண்டு,  மக்களுக்காக போராடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் உண்மையான செயல்பாட்டை பாராட்டி, திருமானூர் பகுதி மக்கள் தாராளமாக நிதி உதவி வழங்கி வாழ்த்தினர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஒன்றிய செய லாளர் வெங்கடாசலம், மாவட்ட குழு உறுப்பினர் டி.தியாக ராஜன், ஒன்றிய குழு உறுப்பினர் ராதா, கட்சி உறுப்பி னர்கள் எஸ்.சாமிதுரை, சே.தேவசகாயம் ஆகியோர் விழப் பள்ளம் கிராமத்தில் கட்சி நிதி வசூல் செய்தனர். ஜெயங்கொண் டம் அருகே சின்னவளையம் கிராமத்தில் எஸ்.என்.துரைராஜ்  தலைமையில், ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம் உள்ளிட்ட  பல தோழர்கள் கட்சி வளர்ச்சி நிதி வசூல் செய்தனர்.